×

சமீபத்திய தேசிய விளையாட்டு, சர்வதேச போட்டிகளில் தமிழ்நாடு வீரர்கள் சாதனை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை : இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்றது. கடந்த மாதம் (ஜனவரி) 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் நடைபெற்றது. பல்வேறு வகையிலான விளையாட்டு பிரிவுகளில் இந்திய மாநிலங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் ஒட்டுமொத்தமாக 98 பதக்கங்களை வென்ற தமிழகம் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. முதல் முறையாக கேலோ இந்தியாவில் இந்த சாதனையை தமிழகம் படைத்துள்ளது.முதல் இடத்தை மகாராஷ்டிராவும், மூன்றாம் இடத்தை ஹரியாணாவும் பிடித்துள்ளன. கேலோ இந்தியா வரலாற்றில் தமிழகம் அதிக பதக்கங்கள் குவிப்பது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் புனேவில் நடந்த கேலோ இந்தியா இரண்டாவது பதிப்பில் அதிகபட்சமாக தமிழகம் 88 பதக்கங்கள் குவித்திருந்தது.

இந்த நிலையில், கேலோ இந்தியா போட்டி தொடரில் தமிழகம் 2ம் இடம் பிடித்ததை பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு. சமீபத்திய தேசிய விளையாட்டு, சர்வதேச போட்டிகளில் தமிழ்நாடு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் 98 பதக்கங்களை வென்று தமிழ்நாடு 2-வது இடத்தை பிடித்து வரலாறு படைத்துள்ளது. வெற்றிகரமாக போட்டிகளை சிறப்பாக நடத்தி முடித்த அமைச்சர் உதயநிதி மற்றும் துறை சார்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சமீபத்திய தேசிய விளையாட்டு, சர்வதேச போட்டிகளில் தமிழ்நாடு வீரர்கள் சாதனை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,M. K. Stalin ,India ,6th Gallo India Youth Sports Tournament ,Trichy ,Madurai ,Coimbatore ,
× RELATED தலைசிறந்த பொறுப்புகளில் மிளிர...